தமிழ்நாடு அரசானது முதன்முதல் ‘நீலகிரி வரையாடு தினத்தை’ 2023 ஆம் ஆண்டில் கொண்டாடியது.
E.R.C. டேவிடர் அவர்களை நன்கு கௌரவிக்கும் வகையில் அக்டோபர் 07 ஆம் தேதியை நீலகிரி வரையாடு தினமாக அரசு தேர்வு செய்துள்ளது.
அவர் 1960 ஆம் ஆண்டுகளில் தென்னிந்தியாவின் இந்த குளம்புக்காலிகள் பற்றிய ஆய்வுகளுக்கு முன்னோடியாக இருந்த ஒரு வனவிலங்கு வளங்காப்பாளர் ஆவார்.
1963 ஆம் ஆண்டு நீலகிரி நிலப்பரப்பில் நீலகிரி வரையாடுகளின் மீதான முதல் கணக்கெடுப்பை மேற்கொண்டு, நீலகிரியில் சுமார் 400 வரையாடுகள் இருப்பதாக அவர் அறிக்கை அளித்தார்.