நீலகிரி வரையாடு வளங்காப்புத் திட்டம்
December 31 , 2022
698 days
2602
- தமிழக அரசானது நீலகிரி வரையாடு எனப்படும் தமது மாநில விலங்கினைப் பாதுகாக்கும் ஒரு முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ், அரசாங்கம் கீழ்க்கண்டவற்றைத் திட்டமிட்டுள்ளது.
- ஆய்வுகள் மற்றும் ரேடியோ தொலை அளவியல் ஆய்வுகள் மூலம் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கையைப் பற்றிய சிறப்பான புரிதலை உருவாக்குதல்
- வரையாடுகளை அவற்றின் முந்தையக் கால வாழ்விடத்தில் மீண்டும் அறிமுகப் படுத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அச்சுறுத்தல்களைச் சரி செய்தல்.
- மேலும், இந்த இனங்கள் பற்றியப் பொது விழிப்புணர்வினை அதிகரித்தல்.
- இத்திட்டம் ஆனது 2022 முதல் 2027 ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட உள்ளது.
- மேலும், E.R.C.டேவிதார் என்பவரைப் போற்றும் வகையில் அக்டோபர் 07 ஆம் தேதி என்பது ‘நீலகிரி வரையாடு தினமாக’ கொண்டாடப்பட உள்ளது.
- 1975 ஆம் ஆண்டில் இந்த இனங்கள் பற்றி மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வுகளின் முன்னோடியாக இவர் திகழ்கிறார்.
- இது அருகி வரும் இனங்களுள் ஒன்றான தென்னிந்தியாவின் வெப்பமண்டல மலைப் பகுதிகளில் காணப்படும் ஒரே ஒரு வெள்ளாட்டினம் ஆகும்.
Post Views:
2602