நீலக்குறிஞ்சி மலர்கள் பன்னிரு வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும். இவற்றின் பூக்குங் காலங்மானது குறிஞ்சி இனங்களைப் பொறுத்து மாறுபடும்.
புதர் (Shrubs) வகைத் தாவரங்களான இவை தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சோலைவனக் (Shola Forest) காடுகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் சேர்வராயன் மலைகளிலும் காணப்படுகின்றன.
2018 ஆம் ஆண்டு ஜீலையில் நீலக் குறிஞ்சிகளின் மலரல் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்ட்ரோபைலாந்தஸ் (Strobilanthes) பேரினத்தை சேர்ந்த இவற்றில் 250 சிற்றினங்கள் உள்ளன.