TNPSC Thervupettagam

நீலக்கொடி சான்றிதழ்

June 9 , 2018 2362 days 1962 0
  • தூய்மையுடைமையையும், சுற்றுச்சூழல் தரநிலைகளையும் பேணிப் பராமரித்து வருவதற்காக ஒடிஸா மாநிலத்தின் கோனார்க் கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ள சந்திரபாகா கடற்கரையானது (Chandrabhaga Beach) ஆசியாவின் முதல் கடற்கரையாக நீலக்கொடி சான்றிதழை (Blue Flag certification) பெற உள்ளது.
  • 33 சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா செயல்பாடுகளோடுத் தொடர்புடைய நிபந்தனைகளோடு கண்டிப்பான இணக்கத்தினைக் கொண்டுள்ள தூய்மையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றளிப்பு வழங்கப்படுகின்றது.

  • கோபன்ஹெகனில் உள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளையால் (Foundation for Environmental Education-FEE) 1985ஆம் ஆண்டு இந்தத் தரநிலைகள் உருவாக்கப்பட்டன.
  • கடந்த ஆண்டு மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாறுபாட்டு அமைச்சகத்தால் (Union Ministry of Forest, Environment and Climate Change - MoEF & CC) தொடங்கப்பட்ட நீலக் கொடித் திட்டத்தின் (Blue Flag Project) ஒரு பகுதியாக தூய்மையான கடற்கரையாக தங்களுடைய கடற்கரையை மாற்ற நாடு முழுவதும் 13 கடற்கரைகள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளினால் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
  • ஒருங்கிணைந்த கடலோர மேலாண்மைக்கான சொசைட்டியானது (The Society of Integrated Coastal Management-SICoM) கடற்கரைகளில் தேவைப்படுகின்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் இந்தியாவில் நீலக் கொடி சான்றளிப்பு செயல்பாடுகளை வசதிப்படுத்துகின்றது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்