சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள விஞ்ஞானிகள் இடி மேகங்களிலிருந்து மேல் நோக்கி எழும்பி வரும் ஒரு பிரகாசமான நீலநிற மின்னல் அலையைக் கண்டறிந்து உள்ளனர்.
இடியின் மேற்பகுதியிலிருந்து வரும் மின் உமிழ்வுகளின் காரணமாக இது போன்ற நீலநிறத் தாரைக் கீற்று மின்னல்களை நிலத்திலிருந்துக் கண்காணிப்பது மிகவும் கடினமாகும்.
ஆனால், விண்வெளியிலிருந்து ஒருவர் இதை மிக எளிதாகக் காணலாம்.
நீலநிறத் தாரைக் கீற்று மின்னல்கள் வழக்கமான மின்னல் உமிழ்வுகளாகத் தொடங்குகின்றன.
இது ஒரு இடியில் மேற்புற நேர் முனைப் பகுதி மற்றும் அயனிப் பகுதிக்கு மேலே உள்ள எதிர்மறை மறைப்பு அடுக்கு ஆகியவற்றிற்கிடையே உருவாகின்றது.