மனித சுவாச அமைப்பிற்கு ஆபத்தினை விளைவிக்கும் மகரந்தங்களைக் கொண்ட கோனோகார்பஸ் மரத்தின் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய மாநில வனத்துறை முடிவு செய்துள்ளது.
நீலாங்கரை கடற்கரையில் பசுமைச் சூழலை உருவாக்குவதற்காக கோனோகார்பஸ் மரங்கள் நடப்பட்டுள்ளன.
குஜராத், தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய சில மாநிலங்கள் ஏற்கனவே ஆப்பிரிக்கக் கடற்கரையைப் பூர்வீகமாகக் கொண்ட கோனோகார்பஸ் மரங்களை நடுவதற்குத் தடை விதித்துள்ளன.
கோனோகார்பஸ் மரத்தில் இருந்து வரும் மகரந்தத் துகள்கள் இருமல், சளி, ஆஸ்துமா மற்றும் பிற சுவாசக் கோளாறுகளின் பாதிப்பினை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.