TNPSC Thervupettagam

நீல இயற்கைக் கூட்டணி

April 25 , 2021 1185 days 721 0
  • நீல இயற்கைக் கூட்டணி என்பது ஐந்து முக்கிய பங்குதாரர்கள் மற்றும் சில இலாப நோக்கமற்ற அமைப்புகளின் ஒரு உலகளாவியக் கூட்டாண்மையாகும்.
  • இதன் முக்கியப் பங்குதார அமைப்புகள் சர்வதேசப் பாதுகாப்பு அமைப்பு, உலக சுற்றுச்சூழல் வசதி, பியூ தொண்டு அறக்கட்டளை, மைன்டெரூ அறக்கட்டளை மற்றும் ராம் மற்றும் மெலானி வால்டன் அறக்கட்டளை ஆகியவையாகும்.
  • நீல இயற்கைக் கூட்டணி  2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 அன்று தொடங்கப்பட்டது.
  • இக்கூட்டணி ஐந்தாண்டுகளில் உலகப் பெருங்கடலில் 5% அளவினைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இக்கூட்டணி ஏழு பெருங்கடல் பகுதிகளைப் பாதுகாப்பதை இலக்காகக் கொண்டு உள்ளது.
  • அவை,
    • அண்டார்டிகா
    • செசல்ஸ்
    • கனடா
    • பலாவு
    • மேற்கு இந்தியப் பெருங்கடல்
    • ஃபிஜி
    • தென் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள டிரிஸ்டன் டா குன்ஹா தீவு
    • ஆகியனவாகும்.

குறிப்பு

  • பெருங்கடல்கள் ஆனது வானிலை, மழைப்  பொழிவு மற்றும் காற்றில் ஆக்சிஜன் அளவு ஆகியவற்றைச் சீரமைப்பதால் மனித வாழ்விற்கு மிகவும் முக்கியமானவை ஆகும்.
  • பெருங்கடல்கள் தற்போது மாசுபாடு, பருவநிலை மாற்றம் மற்றும் அதிகமாக மீன்பிடித்தல் போன்றவற்றினால் மிகப்பெரிய அபாயத்தில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்