நீல வானத்துக்கான தூயக் காற்றிற்கான சர்வதேச தினம் - செப்டம்பர் 07
September 12 , 2024 72 days 80 0
மனித ஆரோக்கியத்தை நன்கு பாதுகாக்க காற்று மாசுபாட்டைக் குறைப்பது உட்பட காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த நாள் வலியுறுத்துகிறது.
உலக சுகாதார ரீதியிலான சேதங்கள் ஆண்டிற்கு சுமார் 8.1 டிரில்லியன் டாலர் என்ற அளவில் மிகப்பெரும் செலவுகள் பொது சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச் சூழலுக்கு காற்று மாசுபாட்டால் ஏற்படுகின்றன.
சர்வதேச மேம்பாட்டு நிதியில் தற்போது ஒரு சதவீதம் மட்டுமே தூய்மையானக் காற்று திட்டங்களுக்குச் செலவிடப்படுகிறது.
தூய்மையானக் காற்று சார்ந்த முன்னெடுப்புகளில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு டாலருக்கும் 30 டாலர் வரையிலான பொருளாதாரப் பலன்கள் கிடைக்கும்.
இந்தியா போன்ற நாடுகளில், காற்று மாசுபாடு ஆனது தொழில்துறைக்கு ஆண்டிற்கு 95 பில்லியன் டாலரும் அல்லது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதமும் செலவிடச் செய்கின்றன.