TNPSC Thervupettagam

நீல வான்வெளிக்கான தூய்மைக் காற்றின் சர்வதேச தினம் – செப்டம்பர் 07

September 9 , 2020 1479 days 483 0
  • நீல வான்வெளிக்கான தூய்மைக் காற்றின் முதலாவது சர்வதேச தினமானது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 07 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • இந்தத் தினமானது சுகாதாரம், உற்பத்தித் திறன் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கு தூய்மைக் காற்றின் முக்கியத்துவம் குறித்து தனிநபர், சமூகம், பெருநிறுவனம் மற்றும் அரசாங்கம் என அனைத்து நிலைகளிலும் ஒரு பொது விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் அன்று நீல வான்வெளிக்கான தூய்மைக் காற்றின் சர்வதேச தினத்தை அனுசரிப்பதற்கான ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
  • உலக சுகாதார நிறுவனமானது இந்தத் தினத்திற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக பீரித்-லைப் (BreatheLife) என்ற ஒரு நிறுவனப் பங்காளருடன் இணைந்து பணியாற்றுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்