நுகர்வோர் நம்பிக்கைக் குறித்த கருத்துக்கணிப்பு 2024
December 17 , 2024 11 days 64 0
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது, அதன் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையில் மேற் கொள்ளப் படும் நுகர்வோர் நம்பிக்கைக் குறித்த கணக்கெடுப்பின் (CCS) கீழ் 2024 ஆம் ஆண்டின் நவம்பர் மாத சுற்று முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்திய நுகர்வோர் மத்தியில் அவர்களின் பொதுப் பொருளாதார நிலை, வேலை வாய்ப்புச் சூழ்நிலை, அவர்களின் வருமானம் மற்றும் செலவினங்கள் பற்றிய பெரும் நம்பிக்கை மிகவும் பலவீனமடைந்துள்ளது.
வீட்டுச் செலவுகள் தவிர கணக்கெடுப்பிற்கான அனைத்து அளவுருக்களிலும் மிகவும் பலவீனமான நம்பிக்கை உணர்வுகள் காரணமாக தற்போதைய காலகட்டத்திற்கான அவர்களின் நம்பிக்கை ஓரளவு குறைந்துள்ளது.
சமீபத்தியக் கணக்கெடுப்பில் எதிர்கால எதிர்பார்ப்பு குறியீடு (FEI) ஆனது 0.5 புள்ளிகள் அதிகரித்து 121.9 ஆக உயர்ந்தது.