TNPSC Thervupettagam

நுகர்வோர் நம்பிக்கை ஆய்வு

April 13 , 2021 1324 days 563 0
  • சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கியானது நுகர்வோர் நம்பிக்கை ஆய்வறிக்கையை வெளியிட்டது.
  • இந்த ஆய்வானது நாட்டின் முக்கிய நகரங்களில் சுமார் 5,000 நபர்களிடையே மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த ஆய்வு கீழ் உள்ள ஐந்து பொருளாதாரக் குறியீடுகள் குறித்த நுகர்வோரின் கருத்துகளின் அடிப்படையில் நடத்தப் படுகிறது.
    • வேலை வாய்ப்பு நிலை,
    • பொருளாதார சூழல்,
    • விலைவாசி நிலவரம்,
    • செலவினம் மற்றும்
    • வருமானம்
  • நுகர்வோர் நம்பிக்கை ஆய்வில் தற்கால நிலவரக் குறியீடு மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புகள் குறியீடு (Current Situation Index and Future Expectations Index) என்ற இரு முக்கிய குறிகாட்டிகள் உள்ளன.

முக்கியத் தகவல்கள்

  • 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 55.5 புள்ளிகளாக இருந்த நுகர்வோர் நம்பிக்கை குறியீடு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 53.1 புள்ளிகளாக குறைந்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 117.1 ஆக இருந்த எதிர்கால எதிர்பார்ப்புகள் குறியீடு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 108.8 ஆக குறைந்தது.
  • இக்குறியீடானது 100க்கு மேல் இருந்தால் அது நம்பிக்கையையும் 100க்கு குறைவாக இருந்தால் அவநம்பிக்கையையும் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்