சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கியானது நுகர்வோர் நம்பிக்கை ஆய்வறிக்கையை வெளியிட்டது.
இந்த ஆய்வானது நாட்டின் முக்கிய நகரங்களில் சுமார் 5,000 நபர்களிடையே மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வு கீழ் உள்ள ஐந்து பொருளாதாரக் குறியீடுகள் குறித்த நுகர்வோரின் கருத்துகளின் அடிப்படையில் நடத்தப் படுகிறது.
வேலை வாய்ப்பு நிலை,
பொருளாதார சூழல்,
விலைவாசி நிலவரம்,
செலவினம் மற்றும்
வருமானம்
நுகர்வோர் நம்பிக்கை ஆய்வில் தற்கால நிலவரக் குறியீடு மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புகள் குறியீடு (Current Situation Index and Future Expectations Index) என்ற இரு முக்கிய குறிகாட்டிகள் உள்ளன.
முக்கியத் தகவல்கள்
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 55.5 புள்ளிகளாக இருந்த நுகர்வோர் நம்பிக்கை குறியீடு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 53.1 புள்ளிகளாக குறைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 117.1 ஆக இருந்த எதிர்கால எதிர்பார்ப்புகள் குறியீடு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 108.8 ஆக குறைந்தது.
இக்குறியீடானது 100க்கு மேல் இருந்தால் அது நம்பிக்கையையும் 100க்கு குறைவாக இருந்தால் அவநம்பிக்கையையும் குறிக்கிறது.