கிழக்கு, தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளின் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான சர்வதேசக் கருதரங்கை இந்தியப் பிரதமர், புது டெல்லியில் துவக்கி வைத்தார். இதன் கருத்துரு “புதிய சந்தைகளில் நுகர்வோரை அதிகாரப்படுதுதல்” என்பதாகும்.
பிராந்திய நாடுகளுக்கான சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு மாநாடு ஒன்றினை இந்தியா நடத்துவது இதுவே முதல்முறையாகும்.
இந்த மாநாடு, ஆசிய நாடுகள் ஐ.நா-வின் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்தவும், நிதிச்சேவைகள் மற்றும் மின்-வர்த்தகம் ஆகியவற்றால் நுகர்வோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஆகியவற்றை பற்றியும் விவாதித்தது.
தெற்கு, கிழக்கு, தென்கிழக்கு ஆசியாவிலிருந்து சுமார் 22 நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்றன. சீனா, தென்கொரியா, சிங்கப்பூர், வங்கதேசம், மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் இதில் அடங்கும்.
இந்த மாநாட்டு, இந்தியாவின் நுகர்வோர் விவகாரங்கள் துறையோடு வர்த்தகம் மற்றும் மேம்பாடு மீதான ஐ.நா. கருத்தரங்கம் என்ற அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்டது.
புதியநுகர்வோர்பாதுகாப்புமசோதா
இதன் முக்கிய நோக்கம், நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகும்.
இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-ஐ மறுபதிலீடு செய்து, 2015 ஐ.நா நுகர்வோர் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை சேர்த்துள்ளது.
இது நுகர்வோர் சச்சரவு குறைதீர் குழு ஒன்றினை, மாவட்ட, மாநில, தேசிய அளவில் அமைக்க வேண்டும் என பரிந்துரைக்கிறது.
மேலும் இது கீழ்க்காணும் அம்சங்களைப் பரிந்துரைக்கிறது,
விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு செயல்படுத்தும் அதிகாரங்களைக் கொண்ட மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஒன்றினை நிறுவ வேண்டும்.
உயர்தர தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை அணுகக் கூடிய விலையில் வழங்குதல்.
ஆபத்தான சரக்குகளில் இருந்து நுகர்வோரைப் பாதுகாத்தல். முழுமையான விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய கையேட்டினை நுகர்வோருக்கு வழங்குதல்
அடையாளத் திருட்டினை ஒழுங்குப்படுத்தல் மற்றும் தரவுப் பாதுகாப்பு அளித்தல்.