TNPSC Thervupettagam

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து விலக்கு

May 21 , 2024 59 days 151 0
  • 1986 ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், சேவைக் குறைபாட்டிற்கு வழக்கறிஞர்கள் பொறுப்பேற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • வழக்கறிஞருக்கு எதிராக இது தொடர்பாக எழுப்பப்பட்ட ஒரு புகாரை நுகர்வோர் மன்றத்தில் விசாரிக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மருத்துவ வல்லுநர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்ற 1996 ஆம் ஆண்டின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
  • உச்ச நீதிமன்றத்தின் கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட, 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமானது நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் நெறிமுறையற்ற வணிக நடைமுறைகளிலிருந்து நுகர்வோருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கானதாகும்.
  • இந்தச் சட்டத்தின் வரம்பிற்குள் தொழில்கள் அல்லது தொழில் வல்லுநர்களை உள்ளடக்கியதாக சட்டமன்றம் பரிந்துரைத்ததாக எதுவும் பதிவு செய்யப் படவில்லை.
  • வழக்கறிஞர்கள் உரிமையியல்/குற்றவியல் சட்டத்தின் கீழ் பொறுப்பேற்க வேண்டுமே தவிர, நுகர்வோர் சட்டத்தின் கீழ் அல்ல.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்