சிலிக்கா நுண் துகள்கள் (SiNPs) மற்றும் கால்சியம் ஆகியவற்றை உள்ளடக்கிய நுண்ணியக் கூட்டு வறள் களி (ஜெரோஜெல்) காயக்கட்டுத் துணியை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இது இரத்தம் விரைவாக உறைவதற்கும், கட்டுப்பாடற்ற இரத்தக் கசிவிற்கு நிவாரணம் வழங்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வறள் களி என்பது குறைந்தபட்சச் சுருக்கத்துடன் உலர்த்துவதன் மூலம் உருவாக்கப் படும் திட வடிவ களிமம் ஆகும்.
வறள் களி நச்சுத் தன்மையற்றவை, விலை குறைந்தவை, உயிரி இணக்கத் தன்மை கொண்டவை, மிகவும் அதிக பரப்பளவைக் கொண்டவை மற்றும் மிக அதிக நுண் துளைகள் கொண்டவையாகும்.