TNPSC Thervupettagam

நுண்ணுயிரிகள் எதிர்ப்புப் பூச்சு

April 10 , 2020 1693 days 619 0
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி நிறுவனமான ஜவஹர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையமானது ஒரே சீரான குணப்படுத்தக் கூடிய நுண்ணுயிரிகள் எதிர்ப்புப் பூச்சு என்ற ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்தப் பூச்சானது இன்புளூயன்சா வைரஸை முற்றிலும் கொல்லும் திறன் கொண்டதாகவும் மெத்திலிசின் எதிர்ப்பு ஸ்டேபைலோகாக்கஸ் அரூஸ், ப்ளூகனோசோல் எதிர்ப்பு காண்டிடா அல்பிகன்ஸ் வகை மற்றும் கரோனா வைரஸ் – 2 உள்ளிட்ட பாக்டீரியா மற்றும் பூஞ்சை (நோய் உண்டாக்கும்) ஆகியவற்றைக் கொல்லும் எதிர்ப்புத் திறன் கொண்டதாகவும் உள்ளது.
  • இதை ஜவுளிகள், நெகிழிகள் போன்ற மேற்பரப்பிற்குள் வைக்க அல்லது பொருத்த முடியும்.
  • இந்தப் பூச்சு பூசப்பட்ட மேற்பரப்பின் மீது நுண்ணுயிரிகள் செயல்பட இந்தப் பூச்சு அனுமதிக்காது என்ற காரணத்தினால் இது  தனித்துவம் மிக்கதாக விளங்குகின்றது.
  • இந்தப் பூச்சானது அதனுடன் தொடர்பு ஏற்பட்ட 30 நிமிடங்களுக்குள் நுண்ணுயிரிகளைக் கொன்று விடும்.
  • இந்தப் பூச்சானது நெகிழிகள், ஜவுளிகள், பிவிசி, பாலிஸ்டிரின் மற்றும் பாலியூரேத்தேன் போன்ற பல்வேறு கரையக் கூடிய கரைசல் கொண்ட தொழில்நுட்பத்தின் மூலம் மேம்படுத்தப் பட்டதாகும்.
  • கோவிட் – 19 தொற்று திடீர்ப் பெருக்கத்தின் போது, இந்தப் பூச்சானது சுகாதாரப் பணியாளர்களின் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், உடைகள் மற்றும் சாதனங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்