TNPSC Thervupettagam

நுண்ணுயிர் எதிர்ப்புத் தடுப்பூசிகள்

July 26 , 2022 857 days 524 0
  • நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் கொண்ட பாக்டீரிய நோய்க் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களைத் தடுப்பதற்காக வேண்டி தற்போது உருவாக்கப்பட்டு வரும் தடுப்பூசிகளின் மீதான தகவல் பற்றிய முதல் அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது.
  • எதிர்ப்புத் திறன் கொண்ட பாக்டீரியத் தொற்றுகள் ஆண்டிற்குக் கிட்டத்தட்ட 4.95 மில்லியன் உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன.
  • அதில், 1.27 மில்லியன் உயிரிழப்புகளுக்கு நேரடிக் காரணம் நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் கொண்ட பாக்டீரியத் தொற்றுகளாகும்.
  • நான்கு பாக்டீரியா நோய்க் கிருமிகளுக்கு எதிராக ஏற்கனவே தடுப்பூசிகள் உள்ளன.
    • நிமோனியா நோய் (ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா)
    • ஹிப் (ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா B வகை )
    • காசநோய் (மைக்கோபாக்டீரியம் காசநோய்) மற்றும்
    • டைபாய்டு காய்ச்சல் (சால்மோனெல்லா டைஃபி).
  • காசநோய் தடுப்பூசி தவிர, மீதமுள்ள மூன்று தடுப்பூசிகளும் திறன்மிக்கவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்