TNPSC Thervupettagam

நுண்ணுயிர் கொல்லிகளின் நுகர்வு

April 21 , 2018 2281 days 729 0
  • சமீபத்திய புதிய ஆய்வின்படி, 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா அதிக அளவு நுண்ணுயிர் கொல்லிகளின் நுகர்வைக் கொண்டுள்ளதோடு குறிப்பிட்ட வகையிலான புதிய நுண்ணுயிர் கொல்லிகளை இறுதி வாய்ப்பாக (Last Resort) பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளில் இந்தியா அதிகளவில் நுகரும் நாடாக இருக்கிறது.
  • 2000 மற்றும் 2015 காலகட்டங்களில் இந்தியாவின் நுண்ணுயிர் கொல்லிகளின் நுகர்வு 103% அளவிற்கு உயர்ந்துள்ளது. இது குறைந்த மற்றும் நடுத்தர பொருளாதார நாடுகளில் உயர்ந்த அளவாகும்.
  • 2000 – 2015 காலகட்டத்தில் 1000 நபர்களால் தினமும் நுகரப்படும் சராசரி நுண்ணுயிர் கொல்லிகளின் நுகர்வானது 63% ஆக உயர்ந்தது.
  • இதனோடு ஒப்பிடும்போது உலகளவில் நுண்ணுயிர் கொல்லிகளின் நுகர்வு 65% அதிகரித்துள்ளது.
  • பொதுவாகப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் கொல்லிகளின் செயல்பாடற்ற நிலையில் கடைசி வாய்ப்பாக பரிந்துரைக்கப்படும் மருந்தான ஆக்ஸோலிடிரோன்ஸ் எனும் புதிய வகை நுண்ணுயிர் கொல்லிகளின் நுகர்விலும் 2012 ஆம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவை முந்திச் சென்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • நுண்ணுயிர்களின் எதிர்ப்புகளே நுண்ணுயிர் கொல்லிகளின் நுகர்வுக்கான முதன்மை காரணமாகும். இந்த எதிர்ப்பானது (நுண்ணுயிர் கொல்லிகளின் விளைவுகளைத் தாங்குதல் மற்றும் பரிணமிப்பதற்கான நுண்ணுயிரிகளின் திறன்) உலகளாவிய நோய்கள் மற்றும் இறப்புகளுக்கான முதன்மைக் காரணியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்