TNPSC Thervupettagam

நுண் ஒளியணுவியல் எலக்ட்ரான் முடுக்கி

March 20 , 2024 250 days 229 0
  • உலகின் மிகச்சிறிய துகள் முடுக்கியை ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக செயல் படுத்தியுள்ளனர்.
  • இது மருத்துவச் சிகிச்சைகளில் சிறிய அளவிலான துகள் முடுக்கிகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் உட்பட பல்வேறு பயன்பாடுகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தலாம்.
  • புதிதாக உருவாக்கப்பட்ட இந்த இயந்திரம், நுண் ஒளியணுவியல் எலக்ட்ரான் முடுக்கி (NEA) என அழைக்கப்படுகிறது.
  • இது தோராயமாக ஒரு சிறிய நாணயத்தின் அளவுள்ள ஒரு சிறிய தொழில்நுட்ப அதிசயமாகும்.
  • இந்த சிறிய முடுக்கியானது, ஆயிரக்கணக்கான தனித்தனி "கட்டமைப்புகளால்" ஆன வெற்றிடக் குழாயைக் கொண்ட சிறிய நுண் சில்லுகளைச் சார்ந்துள்ளது.
  • சுவிட்சர்லாந்தில் உள்ள CERN என்ற அமைப்பில் உள்ள 16.8 மைல் நீளம் (27 KM) கொண்ட லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் (LHC) உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த துகள் முடுக்கி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்