சிறிய நீர்த்திவலைகளை தெளிப்பது ஒளிர்வை உருவாக்குகிறது மற்றும் சுற்றியுள்ள வாயுவில் இரசாயன எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது.
1952 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டு வேதியியலாளர் ஸ்டான்லி மில்லர் மற்றும் இயற்பியலாளர் ஹரோல்ட் யூரே ஆகியோர், நீர் மற்றும் கனிம வாயுக்களின் ஒரு கலவையில் மின்சாரம் பயன்படுத்துவதன் மூலம் உயிர் வாழ்வதற்குத் தேவையான கரிம சேர்மங்கள் (அமினோ அமிலங்கள் போன்றவை) உருவாகலாம் என்பதை நிரூபித்தனர்.
இதில் மின்னல்கள் கடலில் தாக்கிய போது, அது மீத்தேன், அம்மோனியா மற்றும் ஹைட்ரஜன் போன்ற வாயுக்களுடன் வேதியியல் தொடர்புகளைத் தூண்டி கரிம மூலக் கூறுகளை உருவாக்கியது.
தற்போதையப் புதிய ஆய்வின் படி, வெளிப்புற மின்சார ஆற்றலின் தேவையில்லாமல் கரிம சேர்மங்களை உருவாக்க நீர் வீச்சு போதுமானது.
பூமியில் உயிர்கள் உருவாக வேண்டி இந்த மின்னல்கள் காரணமில்லை என்று இந்தக் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.
மோதும் அலைகள் அல்லது நீர்வீழ்ச்சிகள் காரணமாக உருவாகும் சிறிய தீப்பொறிகள் அந்தப் பணியைச் செய்திருக்கலாம்.