TNPSC Thervupettagam

நெகிழிக் கழிவு மேலாண்மை (திருத்தம்) விதிகள், 2024

April 5 , 2024 237 days 253 0
  • சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆனது, இந்தியாவின் 2024 ஆம் ஆண்டு நெகிழிக் கழிவு மேலாண்மை (திருத்தம்) விதிகளில் புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது உயிரியல் ரீதியாக மக்கும் நெகிழிகளை “... மண், நிலப்பரப்பு போன்ற குறிப்பிட்ட சூழலில் உயிரியல் செயல்முறைகளால் சிதையும் திறன் கொண்டவை” என்று மட்டுமல்லாமல், “எந்த நுண்நெகிழிகளையும்...” விட்டுச் செல்லாதவை என்றும் வரையறுக்கிறது.
  • உயிரியல் ரீதியாக மக்கும் நெகிழிகள் என்பது  நெகிழிப் பொருட்கள் விற்கப் படுவதற்கு முன் சுத்திகரிப்புச் செயல்முறைக்கு உட்படுத்தப்படுவதாகும்.
  • கழிவாக வீசப்படும் போது, அத்தகைய நெகிழிப் பொருட்கள் முற்றிலும் சிதைந்து விடுகிறதா என்பதை தீர்மானிக்க இன்னும் எவ்வித சோதனைகளும் மேற்கொள்ளப் படவில்லை என்றாலும் அந்தப் ​​பொருள் காலப்போக்கில் இயற்கையாக சிதைந்து விடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • மறுபுறம், மக்கும் நெகிழிகள் முழுவதும் சிதைவடைகின்றன என்றாலும் அவ்வாறு அவை சிதைவுறச் செய்வதற்குத் தொழிற்சாலை அல்லது பெரிய அளவில் நகராட்சிக் கழிவு மேலாண்மை வசதிகள் தேவை.
  • நுண் நெகிழிகள் என்பது 1 µm மற்றும் 1,000 µm (1 µm என்பது ஒரு மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு) ஆகிய அளவிற்கு இடைப்பட்ட பரிமாணங்களைக் கொண்ட, நீரில் கரையாத திடமான நெகிழித் துகள் என்று வரையறுக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்