நாட்டின் பல்வேறு பகுதிகளில் 6 நெகிழிப் பூங்காக்கள் நிறுவப்படும் என்று மத்திய இரசாயன மற்றும் உரத் துறை அமைச்சரான டி.வி.சதானந்த கவுடா அறிவித்துள்ளார்.
இந்தப் பூங்காக்கள் அசாம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அமைய இருக்கின்றது.
மத்திய பிரதேசத்தின் தமோட்டில் உள்ள ஒரு நெகிழிப் பூங்காவானது ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.
இந்தத் திட்டமானது அபாயகரமான கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் மறுசுழற்சி, கருவிகளை உருவாக்குதல், வடிவமைத்தல் போன்றவற்றிற்கான பிளாஸ்டிக் உற்பத்தி அலகுகளை ஆதரிக்க ஒரு “பொதுவான உள்கட்டமைப்பை” வழங்குகின்றது.