மளிகைக் கடைகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பைகளைத் தடை செய்த உலகின் முதல் நாடு நியூசிலாந்து ஆகும்.
இது ஜூலை 01 முதல் நடைமுறைக்கு வந்த நிலையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்குவதற்கு என்று மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளைக் கையோடு எடுத்துச் செல்லுமாறு அறிவிக்கப் பட்டுள்ளது.
சமீபத்திய நடவடிக்கையானது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், நியூசிலாந்து அரசானது 70 மைக்ரான் அளவு தடிமன் கொண்ட நெகிழியால் செய்யப்பட்ட கைப்பிடிகள் கொண்ட, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பைகளை கடைகளில் வழங்குவதற்குத் தடை விதிக்கச் செய்தது.
இந்தப் புதியத் தடையின் மூலம், ஒவ்வோர் ஆண்டும் 150 மில்லியன் நெகிழிப் பைகள் அல்லது ஒரு மணி நேரத்திற்கு 17,000 நெகிழிப் பைகள் புழக்கத்தில் இருந்து அகற்றப் படும்.
அக்டோபர் மாதத்தில், ஆடு மற்றும் மாடு போன்ற பண்ணை விலங்குகளால் உற்பத்தி செய்யப் படும் பசுமை இல்ல வாயுக்களுக்கு வரி விதிக்க அரசு முன்மொழிந்தது.
உலகின் இத்தகைய முதல் திட்டத்தினால், 2025 ஆம் ஆண்டில் வேளாண் முறையில் வெளியாகும் உமிழ்வுகளுக்கு ஏதேனும் ஒரு வடிவத்தில் விவசாயிகள் பணம் செலுத்த வேண்டி இருக்கும்.
நாட்டின் வேளாண் தொழில்துறையானது அந்த நாட்டின் உமிழ்வுகளின் மீது பாதிப் பங்கினைக் கொண்டுள்ளது.