TNPSC Thervupettagam

நெகிழிப் பொருட்களின் மீதான தடையை மீறுபவர்கள் - தண்டனை

February 18 , 2019 1979 days 592 0
  • தமிழ்நாடு அரசானது நெகிழிப் பொருட்களின் மீதான தடையை மீறுபவர்கள் மீது தண்டனை விதிப்பதற்கென்று ஒரு மசோதாவை நகராட்சிச் சட்டத்தைத் திருத்துவதற்காக மாநில சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • நெகிழிப் பொருட்களை இருப்பு வைத்தல், விநியோகித்தல், மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லுதல் மற்றும் ஒருமுறை பயன்பாடு கொண்ட நெகிழிகளை விநியோகித்தல் ஆகியவற்றை முதல்முறையாக மேற்கொள்ளும் நபர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். இதையே இரண்டாவது முறை மேற்கொண்டால் ஐம்பதாயிரமும் மூன்றாவது முறை மேற்கொண்டால் ரூ. 1 லட்சமும் அபராதம் விதிக்கப்படும்.
  • வணிக வளாகங்கள், ஜவுளி நிறுவனங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் போன்ற பெரு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மற்றும் விநியோகிக்கப்படும் ஒரு முறை பயன்பாடு கொண்ட நெகிழிப் பொருட்களுக்கு அபராதம் விதிக்கப்படும். முதல்முறையாக இவற்றைப் பயன்படுத்தினால் பத்தாயிரமும் இரண்டாவது முறையாக இவற்றைப் பயன்படுத்தினால் பதினைந்தாயிரமும் மூன்றாவது முறையாக இவற்றைப் பயன்படுத்தினால் இருபத்தைந்தாயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.
  • இந்த மசோதா பின்வரும் சட்டங்களில் திருத்தம் செய்யவிருக்கிறது.
    • சென்னை நகர மாநகராட்சிச் சட்டம், 1919
    • தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1920
    • மதுரை நகர மாநகராட்சிச் சட்டம், 1971
    • கோயம்புத்தூர் நகர மாநகராட்சிச் சட்டம், 1981

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்