உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நெகிழியின் (Plastic) பயன்பாட்டை தடை செய்யும் விதமாக நெகிழி இல்லா தமிழ்நாடு கொள்கை (Plastic Free Tamilnadu Policy) என்ற ஒன்றை அறிவித்துள்ளார்.
முன்பு, முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, 2002ம் ஆண்டு நெகிழிப் பொருட்கள் (விற்பனை, சேமிப்பு, பயன்பாடு மற்றும் இடமாற்றம் ஆகியவற்றை தடை செய்தல்) மசோதாவை அறிமுகப்படுத்தி, அதன் தொடர்ச்சியாக ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் பரிந்துரைகள் தற்சமயம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.