மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா ஆக்ரா நகரவாசிகளிடம் நெகிழி மாசுவைக் கட்டுப்படுவதற்கான தாஜ் தீர்மானத்தை முன் மொழிந்தார்.
இந்த முன்மொழிவின் நோக்கம் தாஜ்மகாலைச் சுற்றி 500 மீட்டர் பரப்பளவிற்கு குப்பைகள் இன்றி பராமரிப்பதும் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியை தடை செய்வதும் ஆகும்.
இது UNEP (United Nations Environment Program) நல்லெண்ணத் தூதர் தியா மிர்சா மற்றும் UNEP செயல்முறை இயக்குநர் எரிக் சோல்ஹெம் முன்னிலையில் ஏற்படுத்தப்பட்டதாகும்.
நெகிழி மாசுவை தடை செய்தல் என்ற நோக்கத்துடன் ஜூன் 5-ம் தேதி அனுசரிக்கப்படும் உலக சுற்றுச்சூழல் தினத்தின் நோக்கத்தோடு பொருந்திப் போகும் வகையில் இந்த தீர்மானம் வெளிவந்துள்ளது.