TNPSC Thervupettagam
April 22 , 2022 949 days 457 0
  • இலண்டன் நகரைச் சேர்ந்த இணையச் சங்கேதப் பணம் சார்ந்த கடன் வழங்கும் ஒரு நிறுவனமான நெக்ஸோ, உலகளாவியக் கொடுப்பனவு நிறுவனமான மாஸ்டர்கார்டு நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.
  • இது உலகில் முதல்முறையாக "இணையச் சங்கேதப் பணம் சார்ந்த கொடுப்பனவு அட்டைகளை" அறிமுகப்படுத்த உள்ளது.
  • மின்னணுப் பணம் சார்ந்த ஒரு நிறுவனமான டிபாக்கெட் என்பது நெக்ஸோ என்ற நிறுவனத்திற்கு அட்டைகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும்.
  • இந்த அட்டைக்குக் குறைந்தபட்ச திருப்பிச் செலுத்தும் வகையிலான தொகையோ, மாதாந்திரக் கட்டணங்களோ அல்லது செயலற்ற நிலையில் இருப்பதற்கான கட்டணங்களோ தேவையில்லை.
  • ஒரு மாதத்திற்கு 20,000 யூரோக்கள் வரையில் FX கட்டணம் (foreign transaction) இல்லை.
  • 20% அல்லது அதற்கும் குறைவான கடன் மதிப்பு விகிதத்தைக் கொண்டிருக்கும்  வாடிக்கையாளர்களுக்கு 0% வட்டி வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்