இஸ்ரேலிய நாட்டு ராணுவம் ஆனது காசாவின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளைப் பிரிக்கும் நெட்சாரிம் வழித்தடம் என்று அழைக்கப்படும் பகுதியிலிருந்து தனது நாட்டு ஆயுதப் படைகளை விலக்கியுள்ளது.
இந்த ஒரு நடவடிக்கையானது, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனப் போராளிகள் குழுவிற்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட போர் நிறுத்தம் ஆனது, தற்போது அங்கு நடைபெற்று வரும் போரில் ஓர் இடைநிறுத்தத்தைக் குறித்தது.
இது மிகவும் குறிப்பாக இப்போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதிகளில் உள்ள பாலஸ்தீனியர்களைத் தங்கள் பகுதிகளுக்குத் திரும்ப வழிவகுத்தது.
இந்தப் போர் நிறுத்தம் ஆனது ஹமாஸ் குழுவினரால் கைப்பற்றப்பட்ட சில பணயக் கைதிகளை பரிமாறிக் கொள்ளவும் விடுவிக்கவும் உதவியுள்ளது.