TNPSC Thervupettagam

நெதன்னா பீமா திட்டம்

August 13 , 2022 708 days 384 0
  • தேசிய கைத்தறித் தினத்தை முன்னிட்டுச் சமீபத்தில் தெலுங்கானா மாநில அரசினால் நெதன்னா பீமா திட்டம் தொடங்கப்பட்டது.
  • நெசவாளர்களின் நலனுக்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • நெதன்னா பீமா திட்டம் ஆனது ஒரு வகையிலான காப்பீட்டுத் திட்டமாகும்.
  • இதன் மூலம் சுமார் 80,000 நெசவாளர் குடும்பங்கள் பயன் பெறும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகள் எதிர்பாராத விதமாக உயிரிழந்தால், அந்த நெசவாளர் குடும்பங்களுக்கு அரசு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும்.
  • இத்திட்டமானது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் (LIC) இணைந்து அம்மாநில அரசாங்கத்தினால் செயல்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்