TNPSC Thervupettagam

நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை

February 27 , 2024 143 days 248 0
  • தமிழக முதல்வர் அவர்கள் நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையைத் திறந்து வைத்தார்.
  • இது சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 9 லட்சம் குடியிருப்புகளுக்குக் குடிநீர் வழங்கும் வகையில் ஒரு நாளைக்கு 150 மில்லியன் லிட்டர் கொள்ளளவு (mld) நீரை சுத்திகரிப்பு செய்யக் கூடியது.
  • மீஞ்சூரில் ஒரு நாளைக்கு 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆலை மற்றும் நெம்மேலியில் ஒரு நாளைக்கு 110 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆலைக்கு அடுத்தபடியாக நகரில் அமைக்கப்பட்டுள்ள மூன்றாவது கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை இதுவாகும்.
  • இந்தியாவில் சென்னை நகரம் மட்டும் தான் 750 மில்லியன் லிட்டர் அளவிற்குக் கடல் நீரைக் குடிநீராக்கும் முதல் நகரமாகும்.
  • இது நெம்மேலி மற்றும் மீஞ்சூர் ஆகியவற்றில் தலா 100 மில்லியன் லிட்டர் ஆலை, நெம்மேலியில் மற்றுமொரு 150 மில்லியன் லிட்டர் ஆலை, நெம்மேலி அருகில் பேரூரில் கட்டப் பட்டு வரும் 400 மில்லியன் லிட்டர் ஆலை ஆகியவற்றைக் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்