TNPSC Thervupettagam

நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் – ஜூலை 18

July 19 , 2018 2320 days 608 0
  • நெல்சன் மண்டேலாவின் 100 வது பிறந்த தினத்தைக் குறிக்கும் விதமாக நெல்சன் மண்டேலா தினம் அனுசரிக்கப்படுகிறது (18 ஜூலை 1918).
  • அமைதி மற்றும் சுதந்திரத்திற்கு முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் ஆற்றிய பங்கை அங்கீகரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜூலை 18-ஐ ‘நெல்சன் மண்டேலா சர்வதேச தினமாக’ அறிவித்துள்ளது.

நெல்சன் மண்டேலா பரிசு

  • நெல்சன் மண்டேலா பரிசு முதன்முதலாக 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
  • இப்பரிசின் நோக்கமானது ஐக்கிய நாடுகளின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளால் வழிநடத்தப்பட்டு மனித வர்க்கத்தின் சேவைக்காகப் பாடுபடுபவர்களின் சாதனைகளை கௌரவிப்பதாகும். சமரசப் பேச்சுவார்த்தை மரபு, அரசியல் நிலைமாற்றம் மற்றும் சமூகமாற்றம் ஆகியவற்றை கொண்ட நெல்சன் மண்டேலாவின் தனிச்சிறப்புமிக்க வாழ்க்கை மற்றும் மரபுக்கு மரியாதை செலுத்துவதும் இதன் நோக்கமாகும்.
  • 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைசிறந்த சாதனையாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்களுக்கு (1 ஆண் மற்றும் 1 பெண்) இப்பரிசு வழங்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டு பரிசு பெற்றவர்கள்

  • டாக்டர் ஹெலினா நுடூம், நமீபியா
  • E. திரு.ஜோர்ஜ் பெர்னான்டோ பிரான்கோ சம்பாயோ, போர்ச்சுக்கல்

நெல்சன் மண்டேலா விதிகள்

  • ஐக்கிய நாடுகள் சபையானது நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தின் நோக்கத்தை
    • சிறையில் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதை ஊக்குவித்தல்
    • சிறைக் கைதிகள் சமூகத்தின் ஒரு அங்கம் என்பதிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,
    • சிறைச்சாலை பணியாளர்களின் வேலையை குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த சமூக சேவையாக மதிப்பிடுதல்.

      ஆகியவற்றிற்கு நீட்டித்து பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

  • பொதுச் சபையின் தீர்மானமானது சிறைச்சாலையில் சிறைக் கைதிகளை நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட நிலையான குறைந்தபட்ச விதிகள் ஆகும். இவ்விதிகள் முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவை கௌரவிக்கும் விதமாக ‘நெல்சன் மண்டேலா விதிகள்’ என்று ஒப்புதல் பெற்று அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்