TNPSC Thervupettagam

நெல் ஆராய்ச்சி ஆய்வகம்

November 14 , 2017 2596 days 1307 0
  • பிலிப்பைன்ஸ் நாட்டின் பனோஸ் நகரில் அமைந்துள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IRRI – International Rice Research Institute) தனது பெயர் சூட்டப்பட்ட புதிய நெல் உற்பத்தி ஆய்வகத்தை இந்திய பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக அதிக மகசூல் தரவல்ல புதிய நெல் ரகங்களை உருவாக்கிட IRRI ன் பிராந்திய மையம் ஒன்றை இந்திய அரசு வாரணாசியில் அமைத்து வருகின்றது.
  • IRRI ஆனது, 1960’களின் பசுமைப் புரட்சிக்கு பெரும்பங்களிப்பு வழங்கிய நெல் இரகங்களின் கண்டுபிடிப்பால் அறியப்படும் ஓர் சர்வதேச வேளாண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமாகும்.
  • நெல் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் ஆரோக்கியத்தை அதிகரித்தல், வறுமை மற்றும் பட்டினி ஒழிப்பு, நெல் உற்பத்தியின் நீடித்த சூழலை உறுதி செய்தல் போன்றவை இந்த அமைப்பின் நோக்கங்களாகும்..
  • அமைந்துள்ள இடம் - மணிலா, பிலிப்பைன்ஸ்
  • உணவுப் பாதுகாப்பில் ஆராய்ச்சியில் ஈடுபடும் உலக வேளாண் ஆராய்ச்சி மையங்களின் கூட்டிணைவான CGIAR (Consultative Group for International Agricultural Research) சர்வதேச வேளாண் ஆராய்ச்சி மையங்களுக்கான கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள 15 மையங்களில் IRRI ஆனது ஒரு மையமாகும்.
  • IRRI ஆனது ஆசியாவின் மிகப்பெரிய, இலாப நோக்கமற்ற வேளாண் ஆராய்ச்சி மையமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்