தமிழ்நாட்டின் பழங்கால நெல் வகைகளைப் பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் முன்னோடியான முன்னணி விவசாயியான ஜெயராமன் சென்னையில் காலமானார்.
திருத்துறைப்பூண்டியில் வாழ்ந்த இவர் 169-க்கும் மேற்பட்ட நெல் வகைகளை ஆவணப்படுத்திப் பாதுகாத்துள்ளார்.
உள்நாட்டு நெல் வகை மரபணுக்களின் முன் மாதிரியை பாதுகாக்கும் துறையில் இவர் ஆற்றிய ஊக்கமான பணிக்காக,
சிறந்த மரபணு மீட்பருக்கான தேசிய விருது 2015 மற்றும்
தமிழ்நாடு அரசின் சிறந்த இயற்கை விவசாயி விருது 2011 ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இவர் நெல்லதிகாரம் மற்றும் மாமருந்தாகும் பாரம்பரிய நெல் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
2005 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் தனது சொந்த கிராமமான ஆதிரெங்கத்தில் ‘நமது நெல்லைப் பாதுகாப்போம்’ என்ற பிரச்சாரம் மற்றும் நெல் திருவிழா (ஒவ்வொரு மே மாதம்) ஆகியவற்றை அவர் தொடங்கினார்.