TNPSC Thervupettagam

நேட்டோ படைத் தலைவர்

May 5 , 2019 1937 days 880 0
  • அமெரிக்காவைச் சேர்ந்த வான் படை ஜெனரல் தோட் வோல்ட்டர்ஸ் என்பவர் நேட்டோவின் 19-வது ஐரோப்பிய உயரிய நேச நாடுகளின் படைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
  • வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (NATO - North Atlantic Treaty Organisation) என்பது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 29 நாடுகளின் ஒரு இராணுவ கூட்டிணைவாகும்.
  • நேட்டோ அமைப்பானது கூட்டுப் பாதுகாப்பின் ஒரு அமைப்பாக விளங்குகின்றது.
  • இது எந்தவொரு எதிரி நாடுகளும் தாக்குதல் நடத்தினால் அதற்குப் பதிலடி தரும் வகையிலான பொதுப் பாதுகாப்பிற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஒத்துக் கொண்டுள்ளன என்பதைக் குறிக்கிறது.
  • இது 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 அன்று அமைக்கப்பட்டது.
  • இதன் தலைமையகம் பெல்ஜியத்தின் புரூசல்ஸ் நகரில் அமைந்துள்ளது.
  • ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் என்பவர் நேட்டோவின் பொதுச் செயலாளராக இருக்கின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்