அமெரிக்க மேலவை உறுப்பினர்கள் இந்திய நாட்டினை நேட்டோ பிளஸ் (வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு+) குழுவின் ஒரு பகுதியாக மாற்றும் மசோதாவினை அறிமுகப் படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
நேட்டோ பிளஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் தற்போது நேட்டோ அமைப்பின் உறுப்பினர் நாடுகள் மற்றும் ஐந்து இணை நாடுகள் இடம் பெற்றுள்ளன.
அந்த 5 நாடுகள் என்பது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இஸ்ரேல் மற்றும் தென் கொரியா ஆகியனவாகும்.
பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சார்ந்த உறவுகளை மேம்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
நேட்டோ என்பது 31 ஒத்த எண்ணம் கொண்ட வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அட்லாண்டிக் கூட்டமைப்பு ஆகும்.
இது 1949 ஆம் ஆண்டு வட அட்லாண்டிக் ஒப்பந்தம் (வாஷிங்டன் ஒப்பந்தம்) மூலம் நிறுவப் பட்டது.