TNPSC Thervupettagam
January 6 , 2020 1787 days 1538 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நேத்ரா திட்டத்தின் கீழ் ஒரு ஒளியியல் தொலைநோக்கியை நிறுவுவதற்காக இந்திய வானியற்பியல் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • நேத்ரா திட்டமானது 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் இஸ்ரோவால் தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், இஸ்ரோ அமைப்பானது கண்காணிப்பு வசதிகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. அவை செயற்கைக் கோள்களுக்கு அவற்றின் சுற்றுப்பாதையில் உள்ள மாசுக்கள் மற்றும் அவற்றினால் ஏற்படும் அபாயங்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய உதவும்.
  • இந்தத் திட்டமானது இந்திய செயற்கைக் கோள்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைக் கண்டறிய உதவுகின்றது.
  • தற்போது, இந்தியா 15 தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள், 13 தொலையுணர்வு திறன் கொண்ட செயற்கைக் கோள்கள் மற்றும் 8 வழிகாட்டும் செயற்கைக் கோள்களை இயக்குகின்றது.
  • இஸ்ரோவைத் தவிர, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பும் (Defence Research Development Organisation – DRDO)  நேத்ரா திட்டத்தினை (போக்குவரத்துப் பகுப்பாய்வு வலையமைப்பு) இயக்குகின்றது.
  • இது இணையப் போக்குவரத்தைப் பகுப்பாய்வு செய்யப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு மென்பொருள் வலையமைப்பு ஆகும்.
  • இந்தத் திட்டத்தினை ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு மற்றும் இந்திய அரசின் பிற நுண்ணறிவு அமைப்புகள் பயன்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்