நெதர்லாந்தினை வீழ்த்தி நேபாளம் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியினை வென்று சாதனை படைத்துள்ளது.
15 வருடங்கள் மற்றும் 335 நாட்கள் என்ற வயதில், ரோகிஸ் குமார் பவ்டல் (நேபாளம்) சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடும் 4-வது இளம் கிரிக்கெட் வீரராக ஆகி சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஹசன் ரசா சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய முதல் இளம் கிரிக்கெட் வீரராக உள்ளார். இவர் தனது அறிமுக ஆட்டத்தினை 1996-ல் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில், தனது 14 வருடங்கள் மற்றும் 233 நாட்கள் என்ற வயதில் விளையாடினார்.