நேபாள நாடானது அதன் குடிமக்களுக்கு இந்தியாவில் வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு செலுத்துவதற்கான இந்திய ரூபாய் நோட்டுகளின் மாத உபயோகத்திற்கான உச்ச வரம்பை விதித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே தற்போது உள்ள நடப்புக் கணக்கு பற்றாக்குறை மற்றும் பண இருப்பு ஆகியவற்றில் வளர்ந்து வரும் சிக்கல்களை சமாளிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின் ஒப்புதலின்படி, ஒரு நேபாளகுடிமகன் இந்தியாவில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக ஒரு மாதத்தில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிட முடியாது.