மேம்பாட்டு பங்களிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசானது நேபாள நாட்டிற்கு வழங்கப்படும் நிதியுதவியினை ரூ 35.5 மில்லியனாக விரிவுபடுத்தியுள்ளது.
இந்த நிதியானது ராம்சப் மாவட்டத்தில் உள்ள சித்தேஸ்வர் பொதுக் கல்வி வளாகத்தில் மூன்று அடுக்குக் கட்டிங்களைக் கட்டமைக்க பயன்படுத்தப்பட்டது.
இந்தப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடமானது மாணவர்களின் கற்றல் திறனை உயர்த்தும். மேலும் இது கல்வி கற்க ஆர்வமுள்ள, ஏழை மற்றும் விளிம்பு நிலையில் உள்ள நேபாள மாணவர்கள் கல்வி பெறுவதை மேம்படுத்தவும் உதவும்.