TNPSC Thervupettagam

நேரடி நியமனம் – முதல் பெண் வழக்குரைஞர்

January 12 , 2018 2410 days 767 0
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலீஜியம் குழுவானது மூத்த வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ராவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அவரது பெயரை ஒரு மனதாக பரிந்துரை செய்துள்ளது.
  • இதன் மூலம் இந்தியாவின் உச்ச நிலை நீதி அமைப்பான உச்சநீதிமன்றத்திற்கு அதன் நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்பட முன்னிறுத்தப்பட்டுள்ள இந்தியாவின் முதல் பெண் வழக்குரைஞர் இந்து மல்ஹோத்ராவே ஆவார்.
  • ஒட்டு மொத்த அளவில் அவர் உச்சநீதிமன்றத்தில் ஏழாவது பெண் நீதிபதியாவார்.
  • நீதிபதி – பாத்திமா பீவி உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாவார்.
  • தற்போது நடப்பில் மொத்தம் 25 நீதிபதிகளை கொண்டுள்ள உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி பானுமதி மட்டுமே உச்ச நீதிமன்றத்தின் பெண் நீதிபதியாக உள்ளார்.
  • சுதந்திரத்திற்கு பின்னான 67 ஆண்டுகால வரலாறுடைய உச்சநீதிமன்றம், இது வரை இரு முறை மட்டுமே இரு பெண் நீதிபதிகளை ஒரே நேரத்தில் பணியமர்த்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்