TNPSC Thervupettagam

நேரப் பயன்பாடு குறித்த கணக்கெடுப்பு 2024

March 2 , 2025 2 days 79 0
  • இரண்டாவது அகில இந்திய நேரப் பயன்பாட்டு கணக்கெடுப்பு 2024 ஆனது, சமீபத்தில் புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தினால் வெளியிடப் பட்டு உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் பெண்கள் ஊதியம் வழங்கப்படாத வீட்டு வேலைகளில் தங்கள் வீட்டு உறுப்பினர்களுக்காக ஒரு நாளில் செலவிடும் நேரம் 10 நிமிடங்கள் குறைந்து 289 நிமிடங்களாகக் குறைந்தது.
  • இது 2019 ஆம் ஆண்டில் 299 நிமிடங்களாக இருந்தது.
  • கடந்த ஆண்டு ஆண்களை விட பெண்கள் வீட்டு உறுப்பினர்களுக்கான ஊதியம் வழங்கப்படாத வீட்டு சேவைகளில் ஒரு நாளில் 201 நிமிடங்கள் அதிகமாகச் செலவிட்டு உள்ளனர்.
  • ஆண்களை விட பெண்கள் தம் வீட்டு உறுப்பினர்களுக்கான ஊதியம் வழங்கப்படாத பல பராமரிப்பு நடவடிக்கைகளில் ஒரு நாளில் 62 நிமிடங்கள் அதிகமாகச் செலவிட்டு உள்ளனர்.
  • 15 முதல் 59 வயதுடைய பெண்கள் சுமார் 305 நிமிடங்கள் அதிக நேரம் செலவிட்டதால் ஊதியம் வழங்கப்படாத வீட்டு வேலைகளில் அவர்களின் பங்கு 2024 ஆம் ஆண்டில் அதிகமாகவே இருந்தது.
  • இருப்பினும், வேலை மற்றும் அது தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு என்று, ஆண்கள் பெண்களை விட சுமார் 132 நிமிடங்களை அதிகமாகச் செலவிட்டனர் (பெண்கள் 341 நிமிடங்கள், ஆண்கள் 473 நிமிடங்கள்).
  • இங்கு ஒட்டு மொத்தமாக, 2024 ஆம் ஆண்டில் ஒரு நாளில் சுமார் 83.9 சதவீதப் பெண்கள் ஊதியம் வழங்கப்படாத செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
  • இது 2019 ஆம் ஆண்டில் 84.0 சதவீதமாக இருந்த நிலைக்கு கிட்டத்தட்டச் சமம் ஆகும்.
  • ஊதியம் வழங்கப்படாதச் செயல்பாடுகளில், அவர்களின் பங்கு 2019 ஆம் ஆண்டில் 17.1 சதவீதத்திலிருந்து 2024 ஆம் ஆண்டில் 20.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • ஊதியம் வழங்கப்படாதச் செயல்பாடுகளில் ஆண்களின் பங்கேற்பு விகிதம் 2019 ஆம் ஆண்டில் 43.9 சதவீதத்திலிருந்து 2024 ஆம் ஆண்டில் 45.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • ஊதியம் வழங்கப்படாத வேலைகளில், அவர்களின் பங்கு 54.8 சதவீதத்திலிருந்து 60.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் ஆண்கள் கற்றல் நடவடிக்கைகளில் 415 நிமிடங்கள் செலவிட்டனர் என்ற நிலையில் இது 2019 ஆம் ஆண்டில் பதிவான முந்தைய 426 நிமிடங்களிலிருந்து குறைவாகும்.
  • பெண்கள் 2024 ஆம் ஆண்டில் அத்தகையச் செயல்பாடுகளில் சுமார் 413 நிமிடங்கள் செலவிட்டனர் என்ற ஒரு நிலைமையில் இது 2019 ஆம் ஆண்டில் பதிவான சுமார் 423 நிமிடங்களிலிருந்து குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்