TNPSC Thervupettagam

நேர வங்கிகள் - மத்தியப் பிரதேசம்

September 17 , 2019 1771 days 824 0
  • மத்தியப் பிரதேச அரசாங்கத்தின் மகிழ்ச்சித் துறையானது “நேர வங்கியை” அமைக்கப் பரிந்துரைத்துள்ளது.
  • இது “நேர அலகுகளை” நிதியாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு பரஸ்பர சேவைப் பரிமாற்றமாகும்.
  • தன்னார்வலர்களின் பட்டியலுடன் சமூக அளவிலான வங்கிகள் உருவாக்கப்பட இருக்கின்றன.
  • அவர்கள் வழங்கக்கூடிய “திறன்கள்” அல்லது “அவர்கள் வழங்கக்கூடிய சேவைகள்” ஆகியவற்றின் பட்டியல் இதில் குறிப்பிடப்பட இருக்கின்றன.

  • ஒரு வங்கி உறுப்பினருக்கு ஒரு சேவை தேவைப்படும் போதோ அல்லது ஒரு புதிய திறனைப் பெற விரும்பும் போதோ (எ.கா: ஒரு கிதார் வாசித்தல்), அவள் / அவன் அந்த திறனைக் கொண்டுள்ள மற்றொரு நபருடன் ஒரு மணி நேரம் மதிப்புள்ள நிதியைப் பரிமாறிக் கொள்ளலாம்.
  • இந்தக் கருத்தானது முதன்முதலில் 1827 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சின்சினாட்டி நேர மையத்தில் முன்மொழியப்பட்டது.
  • முதல் நேர வங்கி 1973 இல் ஜப்பானில் அமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்