சுற்றுச்சூழலுக்கான அரசு சாரா நிறுவனமான கிரீன்பீஸ் இந்தியாவின் ஆய்வின்படி பல இந்திய நகரங்கள் நைட்ரஜன் ஆக்சைடை அதிகரிப்பதில் முக்கியப் பகுதிகளாக உள்ளன.
நைட்ரஜன் ஆக்சைடு என்பது கீழடுக்கு ஓசோன் உருவாக்கத்திற்குப் பங்களிக்கும் ஆபத்தான மாசுபடுத்தியாகும்.
டெல்லி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய மெட்ரோ நகரங்கள் அதிக வாகன ஓட்டிகள் மற்றும் டீசல் நுகர்வு காரணமாக நைட்ரஜன் ஆக்சைடு உற்பத்தியின் முக்கிய இடங்களாக உள்ளன.