TNPSC Thervupettagam

நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை

January 31 , 2024 299 days 347 0
  • அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 165 பேர் மரண தண்டனை விதிக்கப் பட்டு உள்ளதையடுத்து, முதல் முறையாக நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றம் எனப்படும் சோதிக்கப்படாத முறையில் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
  • 1996 ஆம் ஆண்டில் இந்தக் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
  • நைட்ரஜன் வாயுவினைச் செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றம் என்பது ஒரு சுவாசக் கருவி வடிவிலான முகமூடியை அக்கைதியின் முகத்தில் வைத்து, சுவாசக் காற்றிற்குப் பதிலாக அவர்களுக்கு தூய நைட்ரஜன் வாயு செலுத்தப்படும் ஒரு முறை ஆகும்.
  • இது ஒருவரின் சுவாசத்தில் ஆக்ஸிஜன் இழப்பு ஏற்பட்டு, சில நொடிகளில் அவரது சுய நினைவை இழக்கச் செய்து, அடுத்த சில நிமிடங்களில் மரணத்தை ஏற்படுத்துகிறது.
  • விஷ ஊசி என்பது அமெரிக்காவில் பொதுவாக பயன்படுத்தப்படும் மரண தண்டனை ஆகும் என்பதோடு 1982 ஆம் ஆண்டில் ஒரு சோதனை மற்றும் "மிதமான" தண்டனை முறையாகவும் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அமெரிக்காவில் கடைசியாக 1999 ஆம் ஆண்டில் ஹைட்ரஜன் சயனைடு வாயுவைப் பயன்படுத்தி மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்