உலகிலேயே அதிக அளவில் நைட்ரஸ் ஆக்சைடு (N2O) வெளியிடும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது.
N2O என்பது ஒரு பசுமை இல்ல வாயு ஆகும் என்பதோடு இது கார்பன் டை ஆக்சைடை விட வளிமண்டலத்தினை அதிக வெப்பமாக்குகிறது.
2020 ஆம் ஆண்டில் உலக அளவில் மனிதனால் உருவாக்கப்பட்ட உமிழ்வுகளில் சுமார் 11% உமிழ்வானது இந்தியாவிலிருந்து வெளியிடப்படுபவையாகும் என்ற நிலையில் 16% பங்குடன் மட்டுமே சீனா இதில் முதலிடத்தில் உள்ளது.
உரத்தின் பயன்பாடானது இந்த உமிழ்வுகளின் முக்கிய மூல ஆதாரமாக உள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் மனித நடவடிக்கைகளின் மூலமான N2O உமிழ்வுகள் 40% (ஆண்டிற்கு மூன்று மில்லியன் மெட்ரிக் டன் N2O) அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் மனித நடவடிக்கைகள் மூலமான N2O உமிழ்வுகளின் அளவின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள ஐந்து நாடுகள் சீனா (16.7%), இந்தியா (10.9%), அமெரிக்கா (5.7%), பிரேசில் (5.3%) மற்றும் ரஷ்யா (4.6%) ஆகிய நாடுகள் ஆகும்.