TNPSC Thervupettagam

நைட்ரஸ் ஆக்சைடு உமிழ்வு நாடுகள் 2024

June 16 , 2024 161 days 222 0
  • உலகிலேயே அதிக அளவில் நைட்ரஸ் ஆக்சைடு (N2O) வெளியிடும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது.
  • N2O என்பது ஒரு பசுமை இல்ல  வாயு ஆகும் என்பதோடு இது கார்பன் டை ஆக்சைடை விட வளிமண்டலத்தினை அதிக வெப்பமாக்குகிறது.
  • 2020 ஆம் ஆண்டில் உலக அளவில் மனிதனால் உருவாக்கப்பட்ட உமிழ்வுகளில் சுமார் 11% உமிழ்வானது இந்தியாவிலிருந்து வெளியிடப்படுபவையாகும் என்ற நிலையில் 16% பங்குடன் மட்டுமே சீனா இதில் முதலிடத்தில் உள்ளது.
  • உரத்தின்  பயன்பாடானது இந்த உமிழ்வுகளின் முக்கிய மூல ஆதாரமாக உள்ளது.
  • கடந்த 40 ஆண்டுகளில் மனித நடவடிக்கைகளின் மூலமான N2O உமிழ்வுகள் 40% (ஆண்டிற்கு மூன்று மில்லியன் மெட்ரிக் டன் N2O) அதிகரித்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் மனித நடவடிக்கைகள் மூலமான N2O உமிழ்வுகளின் அளவின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள ஐந்து நாடுகள் சீனா (16.7%), இந்தியா (10.9%), அமெரிக்கா (5.7%), பிரேசில் (5.3%) மற்றும் ரஷ்யா (4.6%) ஆகிய நாடுகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்