நைட் ஃபிராங்க் நிறுவனத்தின் செல்வ வளம் குறித்த அறிக்கை 2025
March 11 , 2025 21 days 63 0
தற்போது 85,698 என்ற உயர் நிகர சொத்து மதிப்புள்ள தனிநபர்கள் எண்ணிக்கையுடன் (HNWIs) உலகளவில் நான்காவது இடத்தைப் பிடித்து, ஒரு மிக முன்னணி உலகளாவிய செல்வ வளம் கொண்ட மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இது அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக உள்ளது.
குறைந்தபட்சமாக சுமார் 1 மில்லியன் டாலர் முதலீடு செய்யக்கூடிய சொத்துக்களைக் கொண்ட தனிநபர்கள் என வரையறுக்கப்படும் HNWI நபர்கள் எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டில் உலகளவில் 4.4% அதிகரித்துள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்ட அதி உயர் நிகர சொத்து மதிப்புள்ள தனிநபர்களின் (UHNWIs) எண்ணிக்கை என்பது முதல் முறையாக 100,000 எண்ணிக்கையினைத் தாண்டியது.
2024 ஆம் ஆண்டில், UHNWI எண்ணிக்கையில் சுமார் 5.2% அதிகரிப்புடன் அமெரிக்கா உலகிலேயே முன்னணியில் இருந்தது.
அதனைத் தொடர்ந்து, சுமார் 5% விகித அதிகரிப்புடன் ஆசியாவும், 4.7% அதிகரிப்புடன் ஆப்பிரிக்காவும் இடம் பெற்றுள்ளன.