எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 2018-ஆம் ஆண்டிற்கான நைல் திருவிழாவின் 6வது இந்திய பதிப்பு மார்ச் 6 முதல் 17 வரையில் பல்வேறு கலை மற்றும் கலாச்சாரங்களை வெளிப்படுத்துவதற்காக நடத்தப்பட்டு வருகின்றது.
எகிப்தில் நடைபெறும் மிகப்பெரிய வெளிநாட்டு திருவிழாவான இது, இந்தியா மற்றும் எகிப்திற்கு இடையே கலைப் படைப்புகளின் கூட்டிணைவை ஊக்குவிக்கிறது.
இவ்வாண்டு நடத்தப்பெற்று வரும் இத்திருவிழாவில் அலங்கார அணிவகுப்பு மற்றும் இந்தியத் திரைப்படங்களை திரையிடல் என இரு புதிய நிகழ்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
பொழுதுபோக்கு கேளிக்கை நிறுவனமான டீம்வோர்க் ஆர்ட்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து, இந்திய கலாச்சாரத்திற்கான மௌலானா ஆஸாத் மையம் (Maulana Azad Centre for Indian Culture) மற்றும் எகிப்தில் உள்ள இந்தியத் தூதரகம் இத்திருவிழாவை ஒருங்கிணைத்துள்ளது.