TNPSC Thervupettagam

நைல் நதிப் படுகை கூட்டுறவு கட்டமைப்பு ஒப்பந்தம்

October 20 , 2024 12 days 56 0
  • நைல் நதியின் நீர்ப் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் ஆனது எகிப்தின் கடும் எதிர்ப்பையும் மீறி அதிகாரப் பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
  • நைல் நதிப்படுகை முன்னெடுப்பு ஆனது, 10 நதிக் கரையோர நாடுகளின் கூட்டணி ஆகும் என்பதோடு இதன் தலைமையிடம் உகாண்டாவின் என்டெபே எனுமிடத்தில் அமைந்துள்ளது.
  • நைல் நதியானது, 11 நாடுகளில் பரவி விரிந்து பாய்கிறது, ஆனால் இதில் ஐந்து நாடுகள் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளன.
  • எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இன்னும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வில்லை.
  • அவை இரண்டும் கிராண்ட் எத்தியோப்பிய ரினையசன்ஸ் அணை (GERD) தொடர்பாக எத்தியோப்பியாவுடன் நீண்ட காலமாக சர்ச்சையில் சிக்கியுள்ளன.
  • GERD என்பது ப்ளூ நைல் நதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய நீர்மின் உற்பத்தி ஆலையாகும் என்பதோடு இது எத்தியோப்பியாவின் 120 மில்லியன் குடிமக்களுக்கு மின்சாரம் வழங்குகிறது.
  • எகிப்து நாடானது இந்த அணையின் இருப்பினை அச்சுறுத்தலாகக் கருதுகிறது ஏன் எனில் நைல் நதியானது அந்நாட்டின் 97 சதவீத நீர் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
  • நைல் நதிப்படுகை முன்னெடுப்பில் புருண்டி, காங்கோ ஜனநாயகக் குடியரசு, எகிப்து, எத்தியோப்பியா, கென்யா, ருவாண்டா, தெற்கு சூடான், சூடான், தான்சானியா மற்றும் உகாண்டா ஆகியவை அடங்கும் என்ற நிலையில் எரித்திரியா இதில் பார்வையாளர் நாடாகப் பங்கேற்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்