TNPSC Thervupettagam

நைல் நதியின் பழமையான கிளை

May 21 , 2024 186 days 325 0
  • செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி, வல்லுநர்கள் பிரமிடு பகுதிகளுக்கு அருகில் ஒரு பழங்கால நதி கிளை இருந்ததற்கான சாத்தியமான இடங்களை அடையாளம் கண்டுள்ளனர்.
  • இந்த செயற்கைக்கோள் படங்கள் ஒரு காலத்தில் பிரமிட் பகுதிகளுக்கு அருகில் பாய்ந்த 64-கி.மீ. நீளமுள்ள முன்னாள் ஆற்றின் கிளை இருப்பதைக் குறிக்கின்றன.
  • இந்த ஆற்றின் கிளைக்கு அரபு மொழியில் பிரமிடுகள் என்று பொருள்படும் "அஹ்ரமத்" என்று பெயரிட வேண்டும் என்று அவர்கள் முன்மொழிந்துள்ளனர்.
  • ஏறத்தாழ 4,200 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஒரு பெரிய வறட்சிக்குப் பிறகு காற்றில் வீசும் மணல்களின் அளவு அதிகரித்தது, இந்த நதிக்கிளை கிழக்கு நோக்கி நகர்வதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
  • மணல் திரட்சியுடன் சேர்ந்த இந்த நகர்வு ஆனது, இறுதியில் ஆற்றில் வண்டல் படிந்து மறைவதற்கு வழிவகுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்